கமலின் ‘தலைவன் இருக்கிறான்’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

கமலின் ‘தலைவன் இருக்கிறான்’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 9-Jun-2015 5:15 PM IST VRC கருத்துக்கள்

தற்போது ‘தூங்காவனம்’ படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் விரைவில் ‘அமர் ஹே’ என்ற ஹிந்தி படத்தை இயக்கி நடிக்கிறார் என்றும் இதில் கமல்ஹாசனுடன் பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் நடிக்கிறார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தோம். ஏற்கெனவே கமல்ஹாசன் தமிழில் ‘தலைவன் இருக்கிறான்’ என்ற ஒரு படத்தை எழுதி, இயக்கி, நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அந்த படம் தான் இப்போது ஹிந்தியில் ‘அமர் ஹே’ என்ற பெயரிலும், தமிழில் ‘தலைவன இருக்கிறான்’ என்ற பெயரிலும் உருவாக இருக்கிறது. தமிழில் உருவாகும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் பிரபல தெலுங்கு, மலையாள நடிகர்களும் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘தூங்காவனம்’ பட வேலைகள் முடிந்ததும் துவங்குமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;