வெங்கட் பிரபுவின் ‘விழித்திரு’ இசை வெளியீடு!

வெங்கட் பிரபுவின் ‘விழித்திரு’ இசை வெளியீடு!

செய்திகள் 9-Jun-2015 10:50 AM IST VRC கருத்துக்கள்

கிருஷ்ணா, வெங்கட் பிரபு, விதார்த், தன்ஷிகா, எரிகா ஃபெர்னான்டஸ், அபிநயா முதலானோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விழித்திரு’. ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கியிருக்கும் படம் இது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட படம் இது. ஏதோ சில காரணங்களால் இப்படம் தயாராவதில் காலதாமதம் ஏற்பட்டது. இப்போது இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாம். ‘மெயின்ஸ்ட்ரீம் சினிமா’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் மகாலிங்கம் இசை அமைத்துள்ளார். விரைவில் ரிலீஸ செய்ய திட்டமிட்டுள்ள இப்படத்தின் ஆடியோவை இம்மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ‘மங்காத்தா’, ‘பிரியாணி’, ‘மாசு என்கிற மாசிலாமணி’ படங்களின் இயக்குனர் வெங்கட் பிரபு, கிருஷ்ணா, விதார்த் ஆகியோர் கை கோர்த்து நடித்துள்ள ‘விழித்திரு’ வித்தியாசமான கதையமைப்பில் உருவாகி இருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;