மும்பை எக்ஸ்பிரஸுக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் கமல்!

மும்பை எக்ஸ்பிரஸுக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் கமல்!

செய்திகள் 9-Jun-2015 10:34 AM IST VRC கருத்துக்கள்

தற்போது ‘தூங்காவனம்’ படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் மீண்டும் ஒரு ஹிந்திப் படத்தில் நடிக்க இருக்கிறார். கமல்ஹாசன் கடைசியாக நடித்த ஹிந்திப் படம் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’. இந்த படத்தை தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்த கமல்ஹாசன் மீண்டும் ஹிந்திப் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘அமர் ஹே’ என்று பெயர் வைக்கப்படுள்ளது.வீரேந்திர கே.அரோரா, அர்ஜுன் என்.கபூர் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் கதையை கமல்ஹாசனே எழுதியிருக்கிறார். கமல்ஹாசன் எழுதி, இயக்கி நடிக்கும் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

‘அமர் ஹே’ படம் பற்றி தயாரிப்பாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘நடிகர், இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகள் வாய்ந்த கமல்ஹாசனுடன் இணைந்து பணிபுரிவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பட்த்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பை மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெறவிருக்கிறதாம். அத்துடன் லண்டன், துபாய், ஜோர்டான் மற்றும் அமெரிக்காவின் ஒரு சில பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;