‘இன்று நேற்று நாளை’ படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி?

‘இன்று நேற்று நாளை’ படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி?

செய்திகள் 8-Jun-2015 8:58 PM IST Chandru கருத்துக்கள்

வித்தியாசமான படங்களை தொடர்ச்சியாகக் கொடுத்து வரும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியே கிரீனும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘இன்று நேற்று நாளை’.

‘‘சொந்த தொழில்தான் செய்வேன் எவன் கிட்டயும் கைகட்டி வேலை செய்யமாட்டேன்’’ என்ற கொள்கையில் வாழும் இளங்கோ கேரக்டரில் விஷ்ணுவும், அரைகுறை ஜோதிடனாக பிழைப்பு நடத்தும் புலிவெட்டி ஆறுமுகம் கேரக்டரில் கருணாகரனும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தங்கள் கையில் கிடைக்கும் டைம் மிஷினை வைத்துக்கொண்டு ஏற்படுத்தும் பிரச்சனையை, அதே டைம் மிஷின் உதவியோடு தீர்ப்பதே ‘இன்று நேற்று நாளை’ படத்தின் கதை.

விஷ்ணுவிற்கு ஜோடியாக ‘அமரகாவியம்’ படத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிக்கிறார். இப்படத்தை ரவி இயக்கி வருகிறார். ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி இசையமைத்து வருகிறார். வசந்த் ஒளிப்பதிவை செய்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீடு இந்த மாதம் 12ஆம் தேதி (ஜூன்) அன்று நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - உன் நெனப்பு பாடல் வீடியோ


;