தோனியை சந்தித்த ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்!

தோனியை சந்தித்த ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்!

செய்திகள் 8-Jun-2015 12:14 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசாகி அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் படம் ‘காக்கா முட்டை’. பத்திரிகையாளர்களின் நல்ல விமர்சனங்களும் இப்படத்திற்கு கிடைத்திருப்பதோடு கமர்ஷியலாகவும் இப்படம் வெற்றிப் பெற்றுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்பத்தில் ரமேஷ், விக்னேஷ் என இரண்டு சிறுவர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள இப்படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் இருவரும் கிரிக்கெட் விளையாட்டு பிரியர்கள்!

இந்த படம் வணிகரீதியாகவும் நல்ல வசூலை குவித்து வருவதால் இதில் நடித்த அந்த இரண்டு சிறுவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த தயாரிப்பு நிறுவனம் அவர்களுக்கு கிரிக்கெட் வீரர் தோனியை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதற்காக மும்பையில் இருக்கும் தோனியை சந்திக்க நேற்று (7-6-15) இயக்குனர் மணிகண்டன், ரமேஷ், விக்னேஷ் மூவரும் மும்பைக்கு பறந்துள்ளனர். அங்கு தோனியை சந்தித்ததும், அவர் ‘காக்கா முட்டை’ படத்தின் டிரைலர் மற்றும் சில காட்சிகளை பார்த்தாரம்! சிறுவர்கள் சிறப்பாக நடித்திருந்ததை பார்த்து தோனி அவர்களை மனதாரா பாராட்டியதுடன் சிறிது நேரம் உரையாடவும் செய்தாராம்! அப்போது தோனி, இயக்குனர் மணிகண்டனிடம் தான் தமிழ் சப் டைட்டிலுடன் வரும் சில தமிழ் படங்களை பார்த்திருப்பதாக சொன்னாராம்! தோனியை சந்தித்த மகிழ்ச்சியில் இரு சிறுவர்களும் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கியதோடு, புகைப்படமும் எடுத்துகொண்டு சென்னை திரும்பியுள்ளனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;