‘விண்ணைத்தாண்டி வருவாயா’ நடிகையின் ‘அம்மணி’

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ நடிகையின் ‘அம்மணி’

செய்திகள் 8-Jun-2015 11:41 AM IST VRC கருத்துக்கள்

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படங்களை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் படம் ‘அம்மணி’. நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்படும் படமாம் இது. இப்படத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடித்த 82 வயது சுப்புலட்சுமி பாட்டி அம்மணி கேரக்டரில் நடிக்கிறார். Tag Entertainment நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கும் வெண் கோவிந்தா படம் குறித்து கூறும்போது,

‘‘நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டது இக்கதை. ஒவ்வொரு மனித வாழ்க்கையும் மனிததத்தின் சம நிலையை பேணுவதற்காகவே என்ற அற்புதமான எண்ணத்தின்பால் அமைந்ததே ‘அம்மணி’. இத்தகைய நல்லக் கதையை எனக்கு கொடுத்த இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.

‘விண்ணைதாண்டி வருவாயா’ படத்தில் நடித்த சுப்புலட்சுமி பாட்டி இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவர், பகல் இரவென பாராமல் பர பரவென ஷூட்டிங்கில் உற்சாகத்துடன் இருப்பார். பாட்டி என்றழைத்தால் அவருக்கு பிடிக்காது. ‘அக்கா’னு கூப்பிடுங்க’ என்பார். அவரது உற்சாகம் எங்களை குதூகலத்தில் ஆழ்த்தியது. யதார்த்த சினிமாக்களுக்கு இப்போது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் ‘அம்மணி’யும் அனைவரது கவனத்தை பெறும் ஒரு திரைப்படமாக அமையும்” என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அம்மணி - டிரைலர்


;