‘ஃபில்டர் காபி’க்காக பாடிய லட்சுமி மேனன்!

‘ஃபில்டர் காபி’க்காக பாடிய லட்சுமி மேனன்!

செய்திகள் 8-Jun-2015 11:12 AM IST VRC கருத்துக்கள்

லட்சுமி மேன்ன் சிறந்த நடிகை மட்டுமல்ல, சிறப்பாக பாடக் கூடியவரும் கூட! ஏற்கெனவே, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்திற்காக ‘குக்குரு குக்குரு…’ என்ற பாடலை பாடியிருந்தார் லட்சுமி மேனன்!. இப்பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் பாடலை தொடர்ந்து இப்போது ‘ஃபில்டர் காபி’ என்ற படத்திற்காகவும் ஒரு பாடலை பாடியுள்ளார் லட்சுமி மேனன். ‘காபி பெண்ணே…’ என்று துவங்கும் இந்த பாடலின் பிற வரிகள் காபி வகைகளை குறிப்பதாக அமைந்துள்ளதாம். அறிமுக இயக்குனர் ராகவ் இயக்கும் இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் ராமசுப்பிரமணியம் இசை அமைக்கிறார். ‘கொம்பன்’ படத்தை தொடர்ந்து லட்சுமி மேனன் தற்போது ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சோலோ - டீசர்


;