‘‘கடலை போடுறதுல என்னையே மிஞ்சிட்டார் ஜி.வி!’’ - ஆர்யா

‘‘கடலை போடுறதுல என்னையே மிஞ்சிட்டார் ஜி.வி!’’ - ஆர்யா

செய்திகள் 8-Jun-2015 10:41 AM IST Chandru கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து இசையமைத்திருக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடந்த 4ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. லேட்டஸ்ட்டாக இப்படத்தில் நடிகர் ஆர்யாவும் இணைந்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ஆர்யா, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று வேடிக்கை பார்த்திருக்கிறார். ‘பிட் படம் டி...’ பாடலுக்காக ஜி.வி.பிரகாஷ் ஆடிய ஆட்டத்தை நேரில் பார்த்து வியந்திருக்கிறார் ஆர்யா.

இதுகுறித்து தனது ட்வீட்ல், ‘‘த்ரிஷா இல்லனா நயன்தாராவில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தது செம அனுபவம். ‘பிட் படம் டி...’ பாடலுக்கு ஜி.வி. மாமாவின் டான்ஸ் செம செம... பிச்சு பெடல் எடுத்துட்டான்!’’ என்றும், இன்னொரு ட்வீட்டில், ‘‘த்ரிஷா இல்லனா நயன்தாரா செட்டில் ஆனந்தியுடன் ஜி.வி. கடலை போட்டதை கண்டுபிடிச்சுட்டேன். என்னையே மிஞ்சிட்டாரே!’’ என ஜி.வி.யை கலாய்த்திருக்கிறார் ஆர்யா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;