‘தூங்காவன’த்தில் ‘அவன் இவன்’ நாயகி!

‘தூங்காவன’த்தில் ‘அவன் இவன்’ நாயகி!

செய்திகள் 8-Jun-2015 10:14 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் நடிக்கும் ‘தூங்காவனம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அந்த ஃபர்ஸ்ட் லுக் அமைந்திருந்தது. இப்படத்தில் கமலுடன் நடிக்க த்ரிஷா, பிரகாஷ் ராஜ், கிஷோர், சம்பத்ராஜ் முதலானோர் ஏற்கெனவே கமிட் ஆகியுள்ள நிலையில் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் நடித்த மதுஷாலினியும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். கமல் நடிக்கும் இப்படத்திற்கும் ஜிப்ரானே இசை அமைப்பாளர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சில சமயங்களில் - டிரைலர்


;