பாண்டிராஜுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சூப்பர் கிப்ட்!

பாண்டிராஜுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சூப்பர் கிப்ட்!

செய்திகள் 7-Jun-2015 9:50 PM IST Chandru கருத்துக்கள்

‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். அவர் போட்டுக்கொடுத்த பிள்ளையார் சுழி சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் பிரமாதமாக வேலை செய்ய, 3 வருடங்களுக்குள் முன்னணி ஹீரோக்களின் வரிசையை நோக்கி மளமளவென நகர்ந்து கொண்டிருக்கிறார். மெரினாவைத் தொடர்ந்து பாண்டிராஜின் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திலும் விமலுடன் ஹீரேவாக நடித்தார் சிவகார்த்திகேயன். அந்தப் படம் அவருக்கு சூப்பர்ஹிட்டாக அமைந்து 100 நாட்கள் ஓடியது. அதன்பிறகு சிவா நடித்த அத்தனை படங்களுமே 100 நாள் என்ற மைல்கல்லை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவாவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘காக்கி சட்டை’ படமும் இப்போது 100 நாட்களைத் தொட்டிருக்கிறது. நூறாவது நாளைத் தொட்டிருக்கும் இந்த இனிய நாளில் (ஜூன் 7) இன்னொரு சந்தோஷமான விஷயமும் நிகழ்ந்திருக்கிறது. இயக்குனர் பாண்டிராஜின் பிறந்தநாளும் இன்றுதான். இதனை சந்தோஷமாக தன் ட்வீட்டில் குறிப்பிட்டு, காக்கி சட்டையின் வெற்றியை இயக்குனர் பாண்டிராஜுக்கு சமர்ப்பித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். பாண்டிராஜும் பதிலுக்கு, நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து வெற்றிபெற சிவாவை வாழ்த்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னுள் ஆயிரம் - டிரைலர்


;