நடிகை ஆர்த்தி அகவர்வால் மரணம்!

நடிகை ஆர்த்தி அகவர்வால் மரணம்!

செய்திகள் 6-Jun-2015 3:35 PM IST VRC கருத்துக்கள்

பார்த்தி பாஸ்கர் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த, ‘பம்பரக் கண்ணாலே’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஆர்த்தி அகர்வால் (வயது 31). அவர் இன்று நியூஜெர்சியில் காலமானார். உடல் பருமனை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை எடுத்துக் கொள்ள, அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஆர்த்தி அகர்வால். அங்கு அறுவை சிகிச்சை முடிந்ததும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து விட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘பம்பரக் கண்ணாலே’ படத்தில் மட்டுமே நடித்துள்ள ஆர்த்தி அகர்வால், நிறைய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;