ஆனந்தியை ஏமாற்றிய ‘சண்டி வீரன்’ இயக்குனர்!

ஆனந்தியை ஏமாற்றிய ‘சண்டி வீரன்’ இயக்குனர்!

செய்திகள் 6-Jun-2015 3:12 PM IST Top 10 கருத்துக்கள்

அதர்வா, ஆனந்தி ஜோடியாக நடித்திருக்கும் ‘சண்டி வீரன்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அதர்வா பேசும்போது, ‘‘சண்டி வீரன்’ படத்தில் நடித்தது இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது மாதிரி இருக்கிறது. முதல் பெரிய விருது பாலா சார் தயாரிப்பில் நான் நடித்திருப்பது. இரண்டாவது விருது சற்குணம் இயக்கத்தில் நடித்திருபது.

இப்படத்தில் என்னுடன் நடித்துள்ள ஆனந்தி பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். குழந்தை குணம் கொண்டவர் ஆனந்தி. இவர் இயக்குனர் சற்குணத்திடம் நடனம் ஆடுகிற மாதிரி எனக்கு பாடல் வேண்டும் என்று கேட்டார். அதற்கு இயக்குனர் சற்குணம், ‘அருணகிரி இசையில் ஒரு பாடல் உருவாகி வருகிறது. அந்த பாடலை நியூசிலாந்தில் படமாக்க இருக்கிறோம்’ என்று கூறினார். அதை கேட்ட ஆனந்தி தொடர்ந்து நடந்த ஷூட்டிங்கில் எல்லாம படு உற்சாகமாக காணப்பட்டார். அத்துடன் காட்சிகளில் சிறப்பாக நடித்து கொடுக்கவும் செயதார். ஆனந்தியின் அதே உற்சாகம் அவரது தயாருக்கும் இருந்தது. இருவரும் அடிக்கடி எப்போது நியூசிலாந்த் போறோம் என்று கேட்டுக் கொண்டும் இருந்தார்கள். ஆனால் இறுதியில் நியூசிலாந்திற்கு செல்லவில்லை. ஆனந்தியை உற்சாகப்படுத்தவே இயக்குனர் சற்குணம் அவ்வாறு கூறினார்’’ என்றார் அதர்வா!

இதற்கு ஆனந்தி பதிலளித்து பேசும்போது, ‘‘என்னை பாடலுக்கு நியூசிலாந்த் அழைத்து செல்வதாக கூறினார்கள். அதனால் நானும் ஆர்வமாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தேன். ஆனால் கடைசி வரை என்னை நியூசிலாந்த் அழைத்துச் செல்லவே இல்லை! நான் ஆசைப்பட்ட மாதிரி நடனம் ஆடவும் முடியவில்லை. இயக்குனர் சற்குணம் சார் என்னை ஏமாற்றி விட்டார்’’ என்றார் தமாஷாக!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - டீசர்


;