மிஷ்கினை தொடர்ந்து பாலாவின் ஆசி பெற்ற சற்குணம்!

மிஷ்கினை தொடர்ந்து பாலாவின் ஆசி பெற்ற சற்குணம்!

செய்திகள் 6-Jun-2015 2:45 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் பாலா படங்களை இயக்கி வருவதோடு, தனது ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் வேறு இயக்குனர்களை வைத்து படங்களை தயாரித்தும் வருகிறார். மிஷ்கினை இயக்க வைத்து ‘பிசாசு’ படத்தை தயாரித்த பாலா, தற்போது இயக்குனர் சற்குணத்திற்கு இயக்க வாய்ப்பு கொடுத்து தயாரித்துள்ள படம் ‘சண்டி வீரன்’. இப்பத்தில் பாலாவின் ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வா கதாநாயகனாக நடித்திருக்க, ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். அறிமுக இசை அமைப்பாளர் எஸ்.என்.அருணகிரி இசை அமைத்திருக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடந்தது. ஆடியோவை ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்புச் செழியன் வெளியிட, பாலா உட்பட ‘சண்டிவீரன்’ படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு இயக்குனர் சற்குணம் பேசும்போது,
‘‘பரதேசி’ படத்தை தொடர்ந்து அதர்வாவை வைத்து ஒரு படம் தயாரிக்க பாலா சார் திட்டமிட்டிருந்தார். அந்த சமயத்தில் தான் பாலா சாரிடம் இந்த கதையைச் சொல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கதையை கேட்டதும் பாலா சாருக்கு கதை மிகவும் பிடித்து விட்டதாக சொன்னதோடு, அதர்வாவை கூப்பிட்டு, இப்படத்தில் நடிக்க கமிட் செய்து கொடுக்கவும் செய்தார். அப்போது, ‘இனி நீ படத்தை எடுத்து முடித்து எனக்கு காட்டினால் போதும்’’ என்று சொன்ன பாலா சார் அதற்கப்புறம் இந்த படம் சம்பந்தமாக எந்த விஷயத்திலும் தலையிட்டது கிடையாது. படத்தை முடித்து அவருக்கு போட்டு காட்டியதும், அவர் என்னை பாராட்டினார். அவரோட அந்த ஒரு பாராட்டும் ஆசியும் போதும் எனக்கு’’ என்றார் நெகிழ்ச்சியுடன் இயக்குனர் சற்குணம்!

‘களவாணி’, ‘வாகைச்சூட வா’, ‘நய்யாண்டி’ ஆகிய படங்களை தொடர்ந்து சற்குணம் இயக்கியிருக்கும் இந்த ‘சண்டி வீரன்’ முற்றிலும் மாறுபட்ட வகையில் தஞ்சாவூர் பின்னணியில் சொல்லப்படும் கதையாம். அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - டீசர்


;