ஏ.ஆர்.முருகதாஸ் புகழ்ந்து தள்ளிய படம்?

ஏ.ஆர்.முருகதாஸ் புகழ்ந்து தள்ளிய படம்?

செய்திகள் 6-Jun-2015 11:35 AM IST Top 10 கருத்துக்கள்

ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுக்களை எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்ப்பார்களோ, அதே அளவுக்கு தங்களின் சக நடிகர்கள், இயக்குனர்கள், பிரபலங்களின் கருத்துக்களையும் சம்பந்தப்பட்ட படங்களின் நட்சத்திரங்கள் எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக இயக்குனர்கள் ஷங்கர், முருகதாஸ் ஆகியோர் படம் எப்படி இருக்கிறது என்ற தங்களின் கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் தான் பார்த்த படம் குறித்து, ‘‘செம த்ரில்லர்... பெருமையா இருக்கு...!’’ என பாராட்டியிருக்கிறார்.

அவர் பார்த்த படம் எது தெரியுமா? ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘டிமான்ட்டி காலனி’தான். ‘‘டிமான்ட்டி காலனி படம் பார்த்தேன்... செம த்ரில்லர்! அஜய்யை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அருள்நிதியின் நடிப்பு, அரவிந்தின் ஒளிப்பதிவு, பின்னணி, சவுன்ட் எஃபெக்ட்ஸ் எல்லாமே அற்புதம்!’’ என பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார் முருகதாஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;