யார் பிரம்மாண்ட இயக்குனர்... ஷங்கரா? ராஜமௌலியா?

யார் பிரம்மாண்ட இயக்குனர்... ஷங்கரா? ராஜமௌலியா?

கட்டுரை 6-Jun-2015 11:01 AM IST Chandru கருத்துக்கள்

‘பிரம்மாண்டம்’ என்ற வார்த்தைக்கு தென்னிந்திய சினிமா டிக்ஸ்னரியில் அர்த்தம் தேடினால் அதற்கு இரண்டு விடைகள் கிடைக்கும். ஒன்று தமிழ் இயக்குனர் ஷங்கர். இன்னொன்று தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தென்னிந்திய அளவில் மட்டுமின்றி, இந்திய அளவிலும் இந்த இரண்டு இயக்குனர்களின் படம் என்றால் மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். ‘எந்திரன்’ படம் மூலம் புதிய டெக்னாலஜிகளை இந்திய சினிமாவுக்கு ஷங்கர் அறிமுகம் செய்து வைத்தாரென்றால், ‘மஹதீரா’ மூலம் தன் பங்குங்கும் புதிய தொழில்நுட்பங்களை களமிறக்கினார் எஸ்.எஸ்.ராஜமௌலி.

இதனையடுத்து சமீபத்தில் வெளிவந்த சூப்பர்ஹிட்டான ‘ஐ’ படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் ஷங்கர். இந்தப் படம் வெளிவந்தபிறகு ஷங்கர்தான் இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்கள் பேசிக் கொண்டார்கள். ஆனால், ‘பாகுபலி’ டிரைலர் வெளிவந்ததும் இந்து பேச்சு அப்படியே எஸ்.எஸ்.ராஜமௌலியை நோக்கித் திரும்பியது. ஷங்கரைவிட ராஜமௌலியே சிறந்தவர் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டையிட்டுக் கொண்டனர்.

ஆனால், இந்த சர்ச்சைக்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். நேற்று (ஜூன் 5) ‘பாகுபலி’ தமிழ்ப்பட டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சூர்யா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் ராஜமௌலி, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, நடிகர்கள் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ராஜமௌலி, ‘‘தயவுசெய்து ஷங்கருடன் என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அவர் இந்திய சினிமாவிற்கு பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்தவர். ஷங்கருக்கு அடுத்தபடியாக நான் இருக்கிறேன் என்று சொன்னால்கூட, அதை நினைத்து நான் சந்தோஷப்படுவேன். ராஜமௌலிக்கு அடுத்து ஷங்கர் என்று சொல்வதை என்னால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது!‘‘ என்று தன்னடக்கத்துடன் கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி கிராபிக்ஸ் ரகசியங்கள் - வீடியோ


;