கார் ரேஸுக்கு அஜித், சைக்கிள் ரேஸுக்கு ஆர்யா!

கார் ரேஸுக்கு அஜித், சைக்கிள் ரேஸுக்கு ஆர்யா!

செய்திகள் 6-Jun-2015 10:15 AM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை கார் ரேஸ் என்றவுடன் முதலில் ஞாபகத்துக்கு வருபவர் ‘தல’ அஜித்தான். அந்தளவுக்கு பைக் மீதும், கார் மீதும் தீராத காதல் கொண்டவர். விதவிதமான கார்கள், பைக்குகளை வாங்கி அதை ஓட்டிப் பார்ப்பதில் ஆர்வம் மிக்கவர். அதோடு இந்திய மற்றும் சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ள ஒரே இந்திய நடிகரும் அஜித் மட்டுமே. இப்போது ‘தல’ அஜித் பாணியில் நடிகர் ஆர்யாவும் களமிறங்கிவிட்டார். ஆனால் ஆர்யா கலந்துகொள்ளப்போவது சைக்கிள் பந்தயத்தில்!

ஆம்... நடிகர் ஆர்யா தினந்தோறும் பல மைல் தூரம் சைக்கிள் ஓட்டுபவர். தனது நண்பர்களுடன் சேர்ந்து இதற்கென தனியாக சைக்கிள் குழு ஒன்றையும் வைத்திருக்கிறார். இந்தக் குழுவுடன் தினமும் காலை 4 மணி முதல் சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவரின் இந்த பயிற்சி தற்போது அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. ஸ்வீடன் நாட்டில் உள்ள மோட்டாலா என்ற ஊரில் கடந்த 50 வருடங்களாக வாடேர்னருடன் ரேஸ் என்ற சைக்கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயத்தில் அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்கள், மலைகள், சீரற்ற எதிர்காற்று என பல்வேறு சவால்களை கடந்து 300 கிலோமீட்டர் பந்தய தூரத்தை 15 மணி நேரத்திற்குள் முடித்தாகவேண்டும். இந்தப் பந்தயத்தில் கலந்துகொண்டுள்ள ஆர்யா, இதற்காக கடந்த 8 மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

வாழ்த்துக்கள் ஆர்யா... பந்தயத்தில் ஜெயித்து தமிழ் சினிமாவுக்கு பெருமைதேடித் தாருங்கள்!இந்த பந்தயத்திற்காக பிரத்யேகமாக, ‘RYDERS team jamm’ என்ற லேகோ ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஆர்யா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;