‘பாகுபலி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘பாகுபலி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகள் 5-Jun-2015 12:53 PM IST VRC கருத்துக்கள்

‘நான் ஈ’ படத்தைத் தொடர்ந்து எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கியிருக்கும் பிரம்மாண்ட படம் ‘பாகுபலி’. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை அடுத்த மாதம் (ஜூலை) 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழில் இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் வெளியிடுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடத்தில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘பாகுபலி’ படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவிற்கு நடிகர் சூர்யா தலைமை வகிக்கிறார். இந்த விழாவில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, இசையமைப்பாளர் மரகதமணி, ‘பாகுபலி’யில் நடித்துள்ள பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா முதலானோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘பாகுபலி’ என்று கூறப்படுகிறது. இரண்டு பாகமாக வெளியாகவிருக்கும் இப்படம் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;