தனுஷுக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?

தனுஷுக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?

செய்திகள் 5-Jun-2015 11:58 AM IST Chandru கருத்துக்கள்

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயினாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் இவர் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’. இப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘இது என்ன மாயம்’ படத்திலும் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே தற்போது ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர பாபி சிம்ஹாவின் ‘பாம்புச்சட்டை’, ஜீவாவின் ‘கவலை வேண்டாம்’ படங்களிலும் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் கீர்த்தி.

கீர்த்தியின் முதல் படமே இன்னும் ரிலீஸாகாத நிலையில், அவரைத்தேடி 5வதாக புதிய தமிழப் பட வாய்ப்பு ஒன்றும் வந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் புதிய படமொன்றில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அப்படத்தின் திரைக்கதை உருவாக்கும் பணியில் பிரபுசாலமன் பிஸியானதால், தனுஷ் ‘மாரி’ படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். மாரி படத்திற்குப் பிறகு வெற்றிமாறனின் ‘சூதாடி’யில் நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து பிரபுசாலமனின் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;