தொடரும் ஆதி, தாராவின் கெமிஸ்ட்ரி!

தொடரும் ஆதி, தாராவின் கெமிஸ்ட்ரி!

செய்திகள் 5-Jun-2015 10:52 AM IST VRC கருத்துக்கள்

’ஓ காதல் கண்மணி’ படத்திற்கு முன்பு மணிரத்னம் இயக்கிய சில படங்கள் வியாபார ரீதியாக வெற்றிபெறாத நிலையில் அவர் சமீபத்தில் இயக்கி வெளிவந்த ‘ஓ காதல் கண்மணி’ படம் பெரும் வெற்றியை தந்து அவரை மட்டுமல்லாமல் இப்படம் சம்பந்தப்பட்டவர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி வெளியாகிய இப்படம் இன்று 50-ஆவது நாளை தொட்டுள்ளதோடு, இன்னமும் சில தியேட்டர்களில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் பெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த அம்சங்கள் மணிரத்னத்தின் இளைமை ததும்பும் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளலான இசை, ஆதி, தாராவின் காதல் கெமிஸ்ட்ரி, பி.சி.ஸ்ரீராமின் நேர்த்தியான ஒளிப்பதிவு ஆகியவை தான்! ‘ஓ காதல் கண்மணி’ வெளியான அதே தினம் தான் ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 2’ படமும் வெளியானது. பேய் ஹிட்டான இப்படத்திலும் நித்யா மேனன் ஒரு ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஓ காதல் கண்மணி’யின் வெற்றியை தொடர்ந்து பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் மணிரத்னம் தொடர்ந்து இதுபோன்ற வெற்றிப் படங்களை தர வேண்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;