சுதந்திரதினத்துக்கு விஎஸ்ஓபி : ஆர்யாவின் அதிரடித் திட்டம்!

சுதந்திரதினத்துக்கு விஎஸ்ஓபி : ஆர்யாவின் அதிரடித் திட்டம்!

செய்திகள் 5-Jun-2015 10:40 AM IST Chandru கருத்துக்கள்

பொதுவாக இந்தியாவில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி மது விற்பனை கிடையாது. ஆனால், இந்த சுதந்திர தினத்துக்கு தமிழகத்தில் ‘விஎஸ்ஓபி’ கிடைக்கும். விஎஸ்ஓபி என்றவுடன் ஏதோ சரக்குதான் விற்பனை செய்யப்போகிறார்கள் என பரபரக்க வேணாம். ராஜேஷ் தயாரிப்பில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடித்திருக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தின் சுருக்கம்தான் விஎஸ்ஓபி.

இப்படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு அதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் ஆர்யாவும், ராஜேஷும். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து டப்பிங், எடிட்டிங் வேலைகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. இந்த மாதத்தில் ஃபர்ஸ்ட் லுக்கையும், ஜூலை முதல் வாரத்தில் பாடல்களையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ், ஆர்யா, சந்தானம் மூவரும் மீண்டும் இணைந்திருப்பதால் ‘விஎஸ்ஓபி’யை சுவைக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - அஸ்வின் தாத்தா முன்னோட்டம் டீசர்


;