பேய் ஹிட் : ‘காஞ்சனா 2’வின் புதிய இலக்கு!

பேய் ஹிட் : ‘காஞ்சனா 2’வின் புதிய இலக்கு!

செய்திகள் 4-Jun-2015 8:42 PM IST Chandru கருத்துக்கள்

சமீபகால தமிழ்ப்பட போஸ்டர்களில் ‘பேய் ஹிட்’ என்றொரு வார்த்தையை ரசிகர்கள் அடிக்கடி பார்த்திருப்பார்கள். உண்மையில் இந்த ‘பேய் ஹிட்’ என்ற வார்த்தைக்கு தமிழ் சினிமாவிற்கு அர்த்தம் சொன்ன படமொன்றால், அது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘காஞ்சனா 2’தான் என அனைவருமே ஒப்புக்கொள்வார்கள். அந்தளவுக்கு இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.

ஏப்ரல் 17ஆம் தேதி வெளியான இப்படம் நாளை (ஜூன் 5), 50வது நாள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டுகிறது. காஞ்சனா 2விற்குப் பிறகு ஒரு சில முக்கிய படங்கள் ரிலீஸான பின்னரும்கூட தமிழகத்தின் சில தியேட்டர்களில் இன்னமும் ‘காஞ்சனா 2’ ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. தற்போதுவரை இப்படம் தமிழகத்தில் மட்டுமே 50 கோடிகளுக்குள் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

‘காஞ்சனா 2’வின் தெலுங்கு டப்பிங் ‘கங்கா’ மே 1ஆம் தேதி வெளியானது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்படம் சூப்பர்ஹிட். இப்படத்தின் அதிரிபுதிரி வெற்றியால் ‘காஞ்சனா 3’ எப்போது தயாராகும் என ரசிகர்கள் ‘பேய்த்தன’மான எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாநகரம் -1 நிமிட ட்ரைலர்


;