புது வீடு... புது காரு... கலக்குறாங்க சிவாவும், ஸ்ருதியும்!

புது வீடு... புது காரு... கலக்குறாங்க சிவாவும், ஸ்ருதியும்!

செய்திகள் 4-Jun-2015 7:26 PM IST Chandru கருத்துக்கள்

கார், போன், லேப்டாப் போன்ற விஷயங்களை பிரபலங்கள் அந்தந்த டிரென்ட்டுக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொண்டேயிருப்பது வாடிக்கை. இந்த விஷயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம். சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அவர் வாங்கியிருக்கும் புதிய காரின் விலை என்ன தெரியுமா? கிட்டத்தட்ட 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி ரக சொகுசு கார் ஒன்றைத்தான் வாங்கியிருக்கிறார் ஸ்ருதி. சமீபத்தில் நடைபெற்ற ‘தில் தடக்னே தோ’ படத்தின் பிரீமியர் ஷோவைப் பார்ப்பதற்கு இந்த காரில்தான் வந்திறங்கியிருக்கிறார் ஸ்ருதி.

ஸ்ருதி புதிய கார் வாங்கியிருப்பதுபோல், நடிகர் சிவகார்த்திகேயன் புதிய வீடு ஒன்றைக் கட்டி கிரஹப்பிரவேசம் செய்திருக்கிறார். சென்னை வளசரவாக்கத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இதுவரை வசித்துவந்த சிவகார்த்திகேயன் விரைவில் இந்த புதிய வீட்டில் குடியேறவிருக்கிறார். கிரஹப்பிரவேசத்தில் கலந்துகொண்ட காமெடி நடிகர் சதீஷ் இதுகுறித்த புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சி 3


;