சூர்யா தலைமையில் ‘பாகுபலி’க்கு பிரம்மாண்ட விழா!

சூர்யா தலைமையில் ‘பாகுபலி’க்கு பிரம்மாண்ட விழா!

செய்திகள் 4-Jun-2015 11:50 AM IST Chandru கருத்துக்கள்

‘நான் ஈ’ படத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் ‘பாகுபலி’ படத்தை இயக்கியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் தற்போது ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. தமிழில் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. சமீபத்தில் வெளியான ‘பாகுபலி’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதோடு திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த டிரைலரை பாராட்டித் தள்ளியுள்ளனர்.

இந்நிலையில் ‘பாகுபலி’ படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். நாளை (ஜூன் 5) மாலை ஹயாத் ஹோட்டலில் நடைபெறும் இவ்விழாவிற்கு நடிகர் சூர்யா தலைமை தாங்குகிறார். அதோடு படத்தில் பங்காற்றிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, இசையமைப்பாளர் மரகதமணி, நடிகர்கள் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் விழா மேடையை அலங்கரிக்க இருக்கிறார்கள்.

விரைவில் இப்படம் வெளியாகும் நாளை அறிவிக்க இருக்கிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;