வருகிறது நடிகர் சங்க தேர்தல்!

வருகிறது நடிகர் சங்க தேர்தல்!

செய்திகள் 4-Jun-2015 11:21 AM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பதவி வகித்து வருபவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதனையொட்டி நடிகர் சங்கத்திற்கு வருகிற ஜூலை மாதம் 15-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் ராதாரவி துணை தலைவர்கள் விஜயகுமார், கே.என்.காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர், செயற்குழு உறுப்பினர்கள் சார்லி, ரவிகுமார், சின்னி ஜெயந்த், சந்தானபாரதி, சகுந்தலா, கே.ஆர்.செல்வராஜ், வீரமணி, ராஜேந்திரன், ‘பசி’ சத்யா, குயிலி, ஜெயமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் 2015-2018க்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வடபழனியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் ஜூலை 15-ஆம் தேதி அன்று நடத்துவது என்றும், தேர்தல் அதிகாரிகளாக வழக்கறிஞர் ஜெ.செல்வராசன், துணை தேர்தல் அதிகாரியாக வழக்கறிஞர் ஜேம்ஸ் அமுதன் ஆகியோரை நியமிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் சம்பந்தமான அறிவிக்கையை ராதாரவி, சங்க உறுப்பினர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைப்பார். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;