த்ரிஷா, அஞ்சலியுடன் தாய்லாந்து பறந்த ஜெயம் ரவி!

த்ரிஷா, அஞ்சலியுடன் தாய்லாந்து பறந்த ஜெயம் ரவி!

செய்திகள் 4-Jun-2015 11:05 AM IST Chandru கருத்துக்கள்

‘அலெக்ஸ்பாண்டியன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘அப்பாடக்கர்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் சுராஜ். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, த்ரிஷா, அஞ்சலி என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, விவேக், அஸ்வின் ராஜா, ராஜேந்திரன், பூர்ணா (சிறப்புத் தோற்றம்) ஆகியோரும் நடிக்கிறார்கள். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் எஸ்.எஸ்.தமன்.

‘டாக்கி போர்ஷனு’க்கான படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது பாடல்களுக்கான படப்பிடிப்புத் துவங்கியுள்ளது. ‘சதிகாரி...’ எனத் தொடங்கும் பாடல் படப்பிடிப்பு ஒன்றிற்காக தற்போது தாய்லாந்தில் முகாமிட்டுள்ளது ‘அப்பாடக்கர்’ டீம். இயக்குனர் சுராஜ், ஜெயம் ரவி ஆகியோருடன் அஞ்சலியும், த்ரிஷாவும் தாய்லாந்தில் இருக்கிறார்களாம். தற்போது அங்கு ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஜெயம் ரவி ட்வீட் செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்


;