‘புலி’ பாடலில் ‘ஜில்லா’ கூட்டணி!

‘புலி’ பாடலில் ‘ஜில்லா’ கூட்டணி!

செய்திகள் 4-Jun-2015 10:01 AM IST Chandru கருத்துக்கள்

விஜய் ரசிகர்களைப் பொறுத்தவரை விதவிதமான கெட்&அப்களில் விஜய் தோன்றுவதைவிட அவரது படங்களில் வரும் டான்ஸ், ஃபைட், பாடல்களையே அதிகம் விரும்புவார்கள். அதானாலேயே விஜய்யும் தன் ஒவ்வொரு படத்திலும் ஃபைட்டுக்கும், டான்ஸுக்கும் மற்ற நடிகர்களைவிட அதிகம் மெனக்கெடுவார். அதோடு அவரது படங்களில் சூப்பர்ஹிட் பாடல் ஒன்றும் கண்டிப்பாக விஜய்யின் வாய்ஸில் உருவாகிவிடும்.

சச்சின் படத்துக்குப்பிறகு சிறிது காலம் பாடாமலிருந்த விஜய், மீண்டும் ‘துப்பாக்கி’ படத்தின் ‘கூகுள் கூகுள்...’ பாடல் மூலம் தனக்குள்ளிலிருந்த பாடகரை வெளிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து ‘தலைவா’வில் ‘வாங்கண்ணா... வணக்கங்கண்ணா...’, ‘ஜில்லா’வில் ‘கண்டாங்கி... கண்டாங்கி...’, ‘கத்தியில் ‘செல்ஃபி புள்ள...’ என வரிசை விஜய் பாடிய அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட்.

இப்போது சிம்புதேவன் இயக்கத்தில், தான் நடித்துவரும் ‘புலி’ படத்திற்காகவும் சூப்பரான பாடல் ஒன்றைப் பாடி முடித்திருக்கிறாராம் விஜய். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடலைத்தான் பாடியிருக்கிறார் விஜய். ஏற்கெனவே விஜய் பாடிய ‘கண்டாங்கி... கண்டாங்கி’ பாடலை எழுதியவரும் வைரமுத்துதான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;