அடுத்த கட்டத்தில்... பாலாவின் தாரை தப்பட்டை!

அடுத்த கட்டத்தில்... பாலாவின் தாரை தப்பட்டை!

செய்திகள் 4-Jun-2015 8:54 AM IST Chandru கருத்துக்கள்

பாலா இயக்கும் படங்கள் என்றாலே எப்போது ஆரம்பிக்கும், எப்போது படப்பிடிப்பு நடக்கும், எப்போது முடியும் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இப்போதும் அப்படித்தான்... ‘பரதேசி’ படத்திற்குப் பிறகு சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘தாரை தப்பட்டை’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் பாலா. இளையராஜாவின் இன்னிசையில் உருவாகிவரும் இப்படம் கடந்த வருடம் மார்ச் மாதமே வேலைகளைத் துவக்கிவிட்டது. அதோடு அதற்கடுத்த மாதமே இளையராஜாவின் இசையில் 12 பாடல்களும் உருவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

அதன்பிறகு சென்னையில் சில நாட்களும், தஞ்சாவூரில் சில நாட்களும் ‘தாரை தப்பட்டை’ படத்திற்காக படப்பிடிப்பு நடத்தினார் பாலா. தஞ்சாவூரில் நடந்த படப்பிடிப்பில் முதலில் வரலட்சுமிக்கு கழுத்து எலும்பில் அடிபட்டது. ஆனால், உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டு இரண்டொரு நாட்களிலேயே படப்பிடிப்பில் கலந்து கொண்டார் வரு. இதுபோதாதென்று இன்னொரு சமயத்தில் சசிகுமாருக்கும் கை எலும்பு முறிந்தது. இதனால் படப்பிடிப்பிற்கு சில நாட்கள் ஓய்வு கொடுத்திருந்தனர்.

இப்போது சசிகுமாரின் உடல்நலம் தேறிவிட்டதால் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்குச் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் பாலா. முதலில் ஹைதராபாத், பின்னர் கோவா, அதன்பிறகு மறுபடியும் தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி மொத்த வேலைகளையும் முடித்துவிடத் திட்டமிட்டிருக்கிறாராம் பாலா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;