விக்ரம், அக்‌ஷய்குமாரின் பிக் டீல்!

விக்ரம், அக்‌ஷய்குமாரின் பிக் டீல்!

செய்திகள் 3-Jun-2015 4:51 PM IST VRC கருத்துக்கள்

தமிழகத்தில் முதல் முறையாக சினிமா பிரபலங்களால் இயக்கப்படும் 24/7 மணிநேர வீட்டு உபயோக பொருட்கள் விற்கப்படும் தொலைக்காட்சி சேனல் துவங்விருக்கிறது. ‘பிக் டீல் டிவி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சேனல் வருகிற 18-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா இருவர் இணைந்து ஹிந்தி மொழியில் துவங்கியுள்ள ‘பிக் டீல் டிவி’ தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனை தொடர்ந்து இப்போது தமிழ் மொழியிலும் அந்த சேனலை துவக்க முன் வந்துள்ளனர். தமிழில் இயங்கவிருக்கும் இந்த சேனலில் அக்‌ஷய்குமார், ராஜ்குந்த்ரா ஆகியோருடன் நடிகர் விக்ரம் பங்குதாரராகவும், பிராண்ட் அம்பாசிடராகவும் இணைந்துள்ளார்.

அனைத்து DTH-லும் தமிழகம் முழுவதும் பார்க்கக் கூடிய இந்த சேனலில் அன்றாட வாழ்க்கைமுறை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், உடை, உடல் நலம் மற்றும் அழகுசாதன பொருட்கள் ஆகியவை முதன் முறையாக விற்கப்படவிருக்கிறது. இந்த டி.வி.யில் நம்பகத்தன்மையான, கியாரண்டியான பொருட்கள் மட்டும் தான் விற்கப்படுமாம்.
இது குறித்து நடிகர் விக்ரம் கூறும்போது, ‘‘முதல் முறையாக பிரபலங்களால் இயக்கப்படும் 24/7 மணிநேர ஹோம் ஷாப்பிங் தொலைக்காட்சி சேனலான ‘பிக் டீல் டிவி’யை தமிழகத்தில் அறிமுகம் செய்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இது ஒரு வித்தியாசமான முயற்சி. எனது ஒப்புதலின் பேரிலேயே இந்த சேனலில் பொருட்கள் விற்கப்படும். மேலும் இச்சேனலில் வாடிக்கையாளர்களின் சேவையை அறிந்துகொண்டு மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வோம். ‘பிக் டீல் டிவி’ மூலம் உங்களுக்கு கிடைப்பது பெஸ்ட் பொருட்களாகதான் இருக்கும்’’ என்றார் விக்ரம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;