கணிதன், சண்டிவீரன் படம் குறித்து அதர்வா வெளியிட்ட தகவல்!

கணிதன், சண்டிவீரன் படம் குறித்து அதர்வா வெளியிட்ட தகவல்!

செய்திகள் 3-Jun-2015 4:44 PM IST Chandru கருத்துக்கள்

‘இரும்புக்குதிரை’ படத்தைத் தொடர்ந்து தற்போது ஈட்டி, சண்டிவீரன், கணிதன் என 3 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் அதர்வா. இந்த 3 படங்களுமே தற்போது ரிலீஸுக்கு பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கின்றன.

ரவிஅரசு இயக்கத்தில் உருவாகும் ‘ஈட்டி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் பிஸியாகப் போய்க் கொண்டிருக்கின்றன. அதேபோல் டி.என்.சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்ரின் தெரஸா நடிக்கும் ‘கணிதன்’ படமும் இறுதிகட்ட வேலைகளில் பிஸியாக இருப்பதாக அதர்வா அறிவித்துள்ளார். பாலாவின் தயாரிப்பில், சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்குமு ‘சண்டிவீரன்’ படத்தின் பாடல்கள் வரும் 6ஆம் தேதி வெளியாகும் என ட்விட்டர் மூலம் அறிவித்திருக்கிறார் அதர்வா.

கடந்த வருடம் ஆகஸ்டில் வெளியான ‘இரும்புக்குதிரை’ படத்திற்குப் பிறகு அதர்வா நடித்த எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 3 படங்களும் அடுத்தடுத்த ரிலீஸாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் சந்தோஷ மிகுதியில் இருக்கிறார் அதர்வா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கணிதன் - யப்பா சப்பா மேக்கிங் வீடியோ


;