திகில் சீஸன் ஓவர்... சிரிப்பு சீஸன் ஸ்டார்ட்!

திகில் சீஸன் ஓவர்... சிரிப்பு சீஸன் ஸ்டார்ட்!

செய்திகள் 3-Jun-2015 2:38 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த சில நாட்களாக தமிழகத்தை மிரட்டி வந்த வெயில் மற்றும் திகிலின் கொடூரம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியிருக்கிறது. காஞ்சனா 2, டிமான்ட்டி காலனி, மாஸ் என ரசிகர்களை பயமுறுத்திய பேய்ப்படங்களைத் தொடர்ந்து தற்போது சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’, வடிவேலுவின் ‘எலி’ என காமெடிப் படங்களின் ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது.

முருகானந்த் இயக்கத்தில் சந்தானம், ஆஸ்னா ஜவேரி, அகிலா கிஷோர், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான்’ படம் வரும் 12ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள 2வது படம் இது. அதேபோல் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’ படங்களைத் தொடர்ந்து வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் 4வது படமான ‘எலி’ படத்தை வரும் 19ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்கிறார்கள்.

அடுத்தடுத்த வாரங்களில் சந்தானம், வடிவேலு படங்கள் ரிலீஸாவதால் கோலிவுட் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;