ஈராஸில் இருந்து விலகல்! - சௌந்தர்யா ரஜினிகாந்த்

ஈராஸில் இருந்து விலகல்! - சௌந்தர்யா ரஜினிகாந்த்

செய்திகள் 3-Jun-2015 11:21 AM IST VRC கருத்துக்கள்

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தை ‘ஈராஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இதனை தொடர்ந்து ‘ஈராஸ்’ நிறுவனத்தின் தென்னக பிரிவின் தலைமை பதவியை வகித்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த். சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தை தொடர்ந்து ரஜினி நடித்த ‘லிங்கா’, தனுஷ், அமிதாப்பச்சன் நடித்த ‘ஷமிதாப்’, கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’, சூர்யா நடித்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ முதலிய படங்களின் விநியோகத்திலும் இந்நிறுவனம் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் முக்கிய பங்கு வகித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ரஜினி முருகன்’ படத்தையும் ‘ஈரஸ்’ நிறுவனம் தான் வெளியிட இருக்கிறது. இப்படி கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சௌந்தர்யா ரஜினிகாந்த் அந்நிறுவனத்திலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ‘ஈராஸ்’ நிறுவனத்திலிருந்து தான் விலகுவதாக சௌந்தர்யா ரஜினிகாந்தே தனது ட்விட்டர் பக்கம் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;