அஜித்தைத் தொடர்ந்து புனீத்துடன் அருண் விஜய்!

அஜித்தைத் தொடர்ந்து புனீத்துடன் அருண் விஜய்!

செய்திகள் 3-Jun-2015 10:56 AM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துடன் மல்லுக்கு நின்ற அருண் விஜய் இப்போது கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமாருடன் புதிய படமொன்றில் நடிக்கிறார். தற்போது ‘வா’ படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கும் அருண்விஜய், கிடைத்த கேப்பில் தனது முதல் கன்னட படத்தில் நடிக்கிறார்.

‘தோத்மனே ஹுட்கா’ படத்தைத் தொடர்ந்து, பெயரிடப்படாத புதிய கன்னட படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் புனீத் ராஜ்குமார். சரவணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் கன்னடத்திலும் அறிமுகமாகும் நடிகர் அருண்விஜய், புனீத்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் ட்விட்டரில் பதிவேற்றியிருக்கிறார். அதோடு, ‘‘இன்னொரு புதிய அவதாரம்... புனீத் ராஜ்குமாருடன் பெங்களூரு படப்பிடிப்பில்!’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறாரா அல்லது வேறு எதுவும் புதிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறாரா என்பது குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;