‘லிங்கா’ விவகாரம் உண்மை பின்னணி!

‘லிங்கா’ விவகாரம் உண்மை பின்னணி!

செய்திகள் 3-Jun-2015 10:45 AM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்தை தொடர்ந்து அப்படத்தை வாங்கி வெளியிட்ட சிங்காரவேலன் உட்பட பல விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேட்டர்கள். இது சம்பந்தமாக பல போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு, சில அறிக்கைகளும் அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். ஒரு திரைப்படத்தின் விநியோக உரிமை ஒப்பந்தப்படி லாபமோ, நஷ்டமோ அது சம்பந்தப்பட்ட விநியோகஸ்தரையே சேரும். இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் இந்த பிரச்சனையில் ரஜினிகாந்த் தலையிட்டு, பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு செய்தார். அதை தொடர்ந்து ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ‘ராக்லைன்’ வெங்கடேஷ் நஷ்ட ஈடு கொடுக்க முன் வந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுத்து முழு நஷ்டத்தை சரி செய்ய வேண்டும் என்று விநியோகஸ்தர் சிங்காரவேலன் தரப்பினர் கேட்டுக்கொண்டனர். இந்த பிரச்சனை தொடர்பாக விநியோகஸ்தர் கூட்டமைப்பைச் சேர்ந்த திருப்பூர் சுப்பிரமணியம் நடிகர் சாங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் ’கலைப்புலி’ எஸ்.தாணு ஆகியோர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது,

‘‘சிங்காரவேலன் உட்பட பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு ‘லிங்கா’ தயாரிப்பாளர் ‘ராக்லைன்’ வெங்கடேஷ் 12.5 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க முன் வந்தார். அதில் 6 கோடி 26 லட்சத்தை அவர் கொடுத்து விட்டார். அந்த பணத்தை நாங்கள் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு பிரித்து கொடுத்து விட்டோம். மீதி 6 கோடி 24 லட்சம் தயாரிப்பாளர் ’ராக்லைன்’ வெங்கடேஷ் தர இருக்கிறார். அந்த பணத்தையும் வருகிற ஞாயிற்றுக் கிழமைக்குள் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு பிரித்து கொடுத்து விடுவோம்!

சிங்காரவேலன் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு ரஜினிகாந்த் கால்ஷீட் கொடுத்து ஒரு படம் நடித்து தருவதாக நான் கூறியதாக சொல்லியிருந்தார். ரஜினிகாந்த் அப்படிப்பட்ட எந்த வாக்குறுதியும் தரவில்லை, அவர் படம் நடித்து தருவார் என்று நான் சொல்லவும் இல்லை. ரஜினி கால்ஷீட் என்ற வார்த்தையை நாங்கள் உபயோகப்படுத்தவே இல்லை’’ என்று கூறினார்.

இதனை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேசும்போது, ‘‘ரஜினிகாந்த் மனிதாபிமான அடிப்படையில் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க முன் வந்துள்ளார். ஆனால் விநியோகஸ்தர் சிங்காரவேலன் தொடர்ந்து ரஜினிகாந்த் மீது அவதூறு பரப்பி வருகிறார். தொடர்ந்து அவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு பேசும்போது, ‘’எந்த ஒரு சங்கத்திலும் உறுப்பினர் அல்லாத விநியோகஸ்தர் சிங்காரவேலன் தொடர்ந்து உண்மைக்கும் புறம்பாக, தப்பான கணக்கு வழக்குகளை கூறி வருகிறார். முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார். அவரால் ‘கங்காரு’ படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சிக்கு 4.5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதைப்போல ‘திறந்திடு சீசே’ படத்தின் தயாரிப்பாளரும் பாதிக்கப்பட்டிருக்கிறார். தயாரிப்பாளர் சங்கத்திற்கு சிங்காரவேலன் மீது நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே அவர் மீது நடவடிகை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - தாடிக்காரா ஆடியோ பாடல்


;