வாலு ரிலீஸ் எப்போது? - சிம்பு பதில்

வாலு ரிலீஸ் எப்போது? - சிம்பு பதில்

செய்திகள் 3-Jun-2015 10:10 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொருமுறை வாலு ரிலீஸ் தள்ளும்போதும், மற்ற நடிகர்களின் ரசிகர்கள் சிம்புவை கலாய்த்து மீமிஸ் போடுவதில் பிஸியாக இருக்க, சிம்புவின் ரசிகர்கள் மட்டும் நம்பிக்கைத் தளரவிடாமல் அவருக்கு உறுதுணையாகவே இருக்கிறார்கள். ரசிகர்களின் இந்த நம்பிக்கைதான் சிம்புவின் பலம். வாலு ரிலீஸ் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பும்கூட கடைசிநேர சில சிக்கல்களால் இப்போது தள்ளி வைத்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தன் ரசிகர்களை ஆறுதல்படுத்தும் விதமாக சிம்பு ட்விட்டர் மூலம் அவர்களுடன் நேற்று உரையாடினார்.

அப்போது பல ரசிகர்களும் பலவிதமான கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். எல்லாவற்றுக்கும் பொறுமையாகவும், சுவாரஸ்யமாகவும் பதில் கூறினார் சிம்பு. அதில் ரசிகர் ஒருவர் வாலு ரிலீஸ் குறித்து கேட்ட கேள்விக்கு, ‘‘ஜூன் 26 அல்லது ஜூலை 3ல் கண்டிப்பாக ‘வாலு’ ரிலீஸாகும். இந்தமுறை நிச்சயம் தவறாக நடக்காது!’’ என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசை வெளியீடு ஜூலை மாதம் நடக்க உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;