பத்திரிகையாளர்களின் பாராட்டுமழையில் தனுஷின் ‘காக்கா முட்டை’!

பத்திரிகையாளர்களின் பாராட்டுமழையில் தனுஷின் ‘காக்கா முட்டை’!

செய்திகள் 3-Jun-2015 9:21 AM IST Chandru கருத்துக்கள்

வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’யும், தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் ‘காக்கா முட்டை’ படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறது. வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் இப்படத்திற்கான பிரத்யேக பத்திரிகையாளர் காட்சி நேற்று (ஜூன் 2) சென்னை பிரிவியூ தியேட்டர் ஒன்றில் திரையிடப்பட்டது. படத்தின் ஆரம்பம் முதலே பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும் கைதட்டி ரசித்து படம் பார்த்தனர். பின்னர் படம் முடிந்து வெளியே வந்ததும் படத்தின் இயக்குனர் மணிகண்டன், சிறுவர்களின் அம்மா நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் கைகளைப் பிடித்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்துச் சென்றனர்.

1 மணி 51 நிமிடங்கள் ஓடும் இப்படம் குறித்த தங்களது பாராட்டுக்களை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பத்திரிகையாளர்கள் பலரும் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். ஒரு சிலர் இப்படத்தை தமிழின் ‘பதேர் பாஞ்சாலி’ என்றும் இயக்குனர் மணிகண்டனை தமிழின் சத்யஜித் ரே என்றும் புகழ்ந்துள்ளனர். அதோடு இப்படம் இன்னும் பல வருடங்களுக்கு பேசப்படும் படமாக இருக்கும் என்றும் புகழ்கின்றனர். இப்படத்தில் நடித்திருக்கும் ரமேஷ், விக்னேஷ் இரண்டு சிறுவர்களின் நடிப்பும், அவர்களின் அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பு மிக யதார்த்தமாக இருந்ததாக பல பத்திரிகையாளர்களும் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளனர்.

ஏற்கெனவே உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது, தேசிய விருதுகளை வென்றது என்ற கௌரவங்களோடு இப்போது விமர்சகர்களிடமும் நல்ல பெயரை வாங்கியிருப்பதால் ‘காக்கா முட்டை’ படம் தமிழில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;