‘லிங்கா’ விநியோகஸ்தர் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ்!

‘லிங்கா’ விநியோகஸ்தர் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ்!

செய்திகள் 3-Jun-2015 8:50 AM IST Chandru கருத்துக்கள்

‘காஞ்சனா 2’வின் அதிரிபுதிரி வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் என்ன படம் இயக்கப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் பேராவலாக இருக்கிறார்கள். ‘காஞ்சனா 2’ படத்தின் முடிவில் ‘காஞ்சனா 3’ உருவாகும் எனக் கூறியிருந்ததால், அப்படத்தையே லாரன்ஸ் இயக்குவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்கான வேலைகள் ஒருபுறம் போய்க் கொண்டிருந்தாலும், இன்னொருபுறம் வேறொரு புதிய படத்தை இயக்கி, நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் லாரன்ஸ்.

‘லிங்கா’ படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்த வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தை எழுதி, இயக்கி, நடிக்கும் வாய்ப்பு லாரன்ஸ் வசம் வந்திருக்கிறது. கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்திற்கான மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் தேர்வு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேந்தர் மூவிஸின் புதிய படம், காஞ்சனாவின் 3ஆம் பாகம் என இந்த இரண்டு படங்களைத் தவிர்த்து, ‘ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா’ என்ற படத்தையும் இயக்கி, நடிக்கவிருப்பதாக லாரன்ஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;