40 பாட்டிகளுடன் தருண்கோபி நடிக்கும் ‘ வெறி’ ( திமிரு-2)

40 பாட்டிகளுடன் தருண்கோபி  நடிக்கும் ‘ வெறி’ ( திமிரு-2)

செய்திகள் 2-Jun-2015 9:54 AM IST VRC கருத்துக்கள்

‘திமிரு’, ‘காளை’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய தருண்கோபி இயக்கி நாயகனாக நடிக்கும் படம் ‘வெறி’ (திமிரு– 2). இந்த படத்தை கோயம்பேடு மார்கெட் மு.வெள்ளைப் பாண்டி ஆசியுடன் ‘எஸ்.எஸ்.புரொடக்‌ஷன்’ என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.சரவணன் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக ரமணா நடிக்கிறார். கதாநாயகியாக ‘காதல்’ சந்தியா நடிக்கிறார். மற்றும் சுஜாதா, காதல் சுகுமார், முத்துராமன், பரதேசி பாட்டி, கும்கி பாட்டி, மனோஜ், தவசி, ராம்சிங், விருமாண்டி, சேரன்ராஜ், விசித்திரன், தீப்பெட்டி கணேசன்,வைரவன், ரேவதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘வெறி’ குறித்து இயக்குனர் தருண் கோபி கூறும்போது, ‘‘முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடக்கும் பக்கா கமர்ஷியல் படம். ‘திமிரு’ படத்தை போலவே இந்த படத்திலும் விறுவிறுப்பான திரைக்கதை இருக்கும். படத்தில் எமோஷனஸ், காதல் மோதல் என படம் முழுக்க அதிரடியாக இருக்கும். மதுரை, திண்டுக்கல், வத்தலகுண்டு, உசிலம்பட்டி போன்ற ஊர்களில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படும் சம்பவங்கள் தான் படத்தின் திரைக்கதை. படத்திற்காக 35 நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம். சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக இந்த படத்தில் நாற்பது பாட்டிகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படம் தயாராகி வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். சேவிலோராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிருதன் - வெறி வெறி பாடல் வீடியோ


;