ஜூன் 4ல் இணையும் குரு-சிஷ்யன்!

ஜூன் 4ல் இணையும் குரு-சிஷ்யன்!

செய்திகள் 2-Jun-2015 9:27 AM IST VRC கருத்துக்கள்

2010ல் வெளிவந்த ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் என்.ஆர்.ரகுநந்தன். அதற்கு முன்பு அவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பாளராக அறிமுகமான ‘மதயானைக்கூட்டம்’ படத்திற்கும் என்.ஆர்.ரகுநந்தனே இசை அமைத்தார். தற்போது குரு - சிஷ்யன் இருவருமே ஜூன் 4ல் தங்களது ஆல்பங்களை வெளியிடுவதன் மூலம் இணைகிறார்கள்.

ஆம்... ஜி.வி. நாயகனாக நடித்து, இசையமைத்திருக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் பாடல்கள் வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. அதேபோல் விமல், அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் ‘மாப்ள சிங்கம்’ படத்தின் ஆடியோவும் வரும் ஜூன் 4ஆம் தேதிதான் வெளியாகிறது. இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் என்.ஆர்.ரகுநந்தன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;