ராதாரவியின் இடத்தைப் பிடித்த விஷாலின் தந்தை!

ராதாரவியின் இடத்தைப் பிடித்த விஷாலின் தந்தை!

செய்திகள் 2-Jun-2015 8:51 AM IST VRC கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘பிசாசு’ படம் கன்னடத்தில் ‘ராக்‌ஷஸி’ என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அஷ்ரஃப் இயக்குகிறார். இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் ‘எழாம் அறிவு’, ‘கஜினி’ (ஹிந்தி), ‘துப்பாக்கி’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ‘ராக்‌ஷஸி’ படத்தில் தமிழில் நாகா நடித்த கேரக்டரில் புதுமுகம் நவரசன் நடிக்க, பிரயாகா நடித்த கேரக்டரில் பிரபல கன்னட நடிகை சிந்து லோகநாத் நடிக்கிறார். ராதாரவி நடித்த கேரக்டரில் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி நடிக்கிறார். ஜி.கே.ரெட்டி இதற்கு முன் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் ஒரு முழுநீள கேரக்டரில் நடிப்பது இதுதான் முதல் முறை!
‘ஸ்ரீலக்‌ஷ்மி விருஷத்ரி புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை பின்னி மில்லில் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டுள்ள ஐஸ் ஃபேக்டரி போன்ற செட்டில் ஜி.கே.ரெட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியபோது அந்த படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் விஷால் விசிட் அடித்து, தன் தந்தை நடிப்பதை பார்த்து ரசித்ததுடன் படக்குழுவினரை வாழ்த்தி விட்டு வந்துள்ளார். சென்னை படப்பிடிப்பை தொடர்ந்து பெங்களூரில் 40 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

‘பிசாசு’ படத்திற்கு இசை அமைத்த அரோல் கொரேலிதான் ‘ராக்‌ஷஸி’ படத்திற்கும் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவாளர் ப்ரியனின் அசிஸ்டென்ட் மோகன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை இயக்கி வரும் அஷ்ரஃப் தமிழில் ‘வரைபடம்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 30 சதவிகிதம் நடந்து முடிந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;