‘‘என் படம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு!’’ - சந்தானம்

‘‘என் படம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு!’’ - சந்தானம்

செய்திகள் 1-Jun-2015 5:31 PM IST Chandru கருத்துக்கள்

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் 2வது படம் ‘இனிமே இப்படித்தான்’. ‘ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் மூலம் இப்படத்தை சந்தானமே தயாரித்துள்ளார். முருகானந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆஸ்னா ஜவேரி நடித்துள்ளார். இவர்களுடன் அகிலா கிஷோர், தம்பி ராமையா, விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

வரும் ஜூன் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சந்தானம், ‘‘இப்படத்தை உலகம் முழுவதும் நானே ரிலீஸ் செய்யலாம் என்றிருக்கிறேன். ஏனென்றால் என் படம்மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை கடைசி நேரத்தில் யாராவது நல்ல விலைக்குக் கேட்டால் அவர்களிடம் கொடுக்கலாம் என்ற எண்ணமும் உள்ளது!’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;