ஆர்யாவை கொடுமைப்படுத்தும் இயக்குனர் ராஜேஷ்!

ஆர்யாவை கொடுமைப்படுத்தும் இயக்குனர் ராஜேஷ்!

செய்திகள் 1-Jun-2015 4:23 PM IST Chandru கருத்துக்கள்

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தைத் தொடர்ந்து ஆர்யாவும், இயக்குனர் ராஜேஷும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ (VSOP) படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். ராஜேஷின் ஆஸ்தான காமெடியன் சந்தானம் இப்படத்திலும் ஆஜர். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். 2 பாடல்களுக்கான படப்பிடிப்பு தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் ஏற்கெனவே படமாக்கப்பட்டுவிட்டதாம். தற்போது இப்படத்திற்கான டப்பிங் வேலைகள் படு பிஸியாகப் போய்க் கொண்டிருக்கின்றன.

டப்பிங்கில் இருக்கும் ஆர்யா இதுகுறித்து விளையாட்டாக ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். ‘‘காமெடி கிங் ராஜேஷுடன் VSOP படத்தின் டப்பிங்கில் இருக்கிறேன். மாடுலேஷன், மாடுலேஷன்னு சொல்லியே சாவடிக்கிறான்!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட்டில் இப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - அஸ்வின் தாத்தா முன்னோட்டம் டீசர்


;