ரஜினி - ரஞ்சித் படம் : அதிகாரபூர்வ புதிய தகவல்கள்!

ரஜினி - ரஞ்சித் படம் : அதிகாரபூர்வ புதிய தகவல்கள்!

செய்திகள் 1-Jun-2015 3:28 PM IST Chandru கருத்துக்கள்

ரஜினி - ரஞ்சித் கூட்டணி இப்போது அதிகாரபூர்வமாகவும் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. ‘லிங்கா’ படத்தைத் தொடர்ந்து யார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என கோலிவுட்டில் பெரிய பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்க, சத்தமில்லாமல் ‘மெட்ராஸ்’ ரஞ்சித்திடம் கதை கேட்டு, அதை ‘டிக்’ செய்தார் சூப்பர்ஸ்டார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கிறார். ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். ‘யூத்’களின் ஃபேவரைட் இசையமைப்பாளரான சந்தோஷின் இசையமைப்பில் ரஜினி படப்பாடல்கள் எப்படி இருக்கும் என இப்போது ரசிகர்கள் ஏங்கத் தொடங்கிவிட்டனர்.

‘மெட்ராஸ்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜி.முரளி இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் - கபிலன், உமாதேவி, கானா பாலா
கலை இயக்கம் - ராமலிங்கம்
சண்டைப்பயிற்சி - அன்பு அறிவு,
நடனம் - சதீஷ்
ஒலி வடிவமைப்பு - ரூபன் என இளமைக்கூட்டணி சூப்பர்ஸ்டார் படத்தில் இணைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் மலேஷியாவில் படப்பிடிப்பு தொடங்கி, 60 நாட்கள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங்க் மற்றும் சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;