விஷ்ணுவின் கையில் 5 தமிழ்ப் படங்கள்!

விஷ்ணுவின் கையில் 5 தமிழ்ப் படங்கள்!

செய்திகள் 1-Jun-2015 3:19 PM IST Chandru கருத்துக்கள்

வளர்ந்து வரும் கோலிவுட் நாயகர்களில் விஷ்ணு விஷால் முக்கியமானவர். கடந்த வருடம் முண்டாசுப்பட்டி, ஜீவா என இரண்டு படங்கள் அவர் நாயகனாக நடித்து வெளிவந்தன. அதனைத் தொடர்ந்து இந்த வருடத்தில் தற்போது வரை 4 படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணு. அதோடு எழில் இயக்கத்தில் புதிய படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து விஷ்ணு நடித்திருக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படமும், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ‘இன்று நேற்று நாளை’ படமும் விரைவில் வெளிவரவிருக்கின்றன. இந்த இரண்டு படங்கள் தவிர ‘சேட்டை’ கண்ணன் இயக்கத்தில் ‘போடா ஆண்டவனே என் பக்கம்’ படத்திலும், ‘சகுனி’ ஷங்கர்தயாள் இயக்கத்தில் ‘வீர தீர சூரன்’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த 4 படங்களோடு 5வதாக எழில் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஷ்ணு. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - உன் நெனப்பு பாடல் வீடியோ


;