இன்று மாலை ரஜினி பட அதிகாரபூர்வ அறிவிப்பு!

இன்று மாலை ரஜினி பட அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 1-Jun-2015 1:04 PM IST VRC கருத்துக்கள்

’லிங்கா’ படத்தைத் தொடர்ந்து ரஜினி ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன் 2’ படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கிய பா.ரஞ்சித், ரஜினியை சந்தித்து ஒரு கதை சொன்னார் என்றும், அந்த கதையில் ரஜினி நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்றும், இந்த படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்தப் படம் குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவல்களும் வெளிவராத நிலையில், இன்று (1-6-15) மாலை ரஜினி அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் அதிகாரபூர்வ தகவல்களை வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினி, பா.ரஞ்சித் இணையும் படத்தின் அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;