இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி!

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி!

செய்திகள் 1-Jun-2015 12:37 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தி, நாகார்ஜுனா இணைந்து நடிக்க, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஒரு சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொண்டனர் படப்பிடிப்பு குழுவினர்! இப்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட பட்ப்பிடிப்பு ஹைதாராபாத்தில் துவங்கியுள்ளது. இதில் கார்த்தி கலந்து கொள்கிறார். ‘பிவிபி சினிமா’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை வம்சி இயக்குகிறார். இவர் தெலுங்கில் ‘பிருந்தாவனம்’, ‘யவடு’ உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பீச்சாங்கை - டீசர்


;