விளம்பர சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராதிகா!

விளம்பர சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராதிகா!

செய்திகள் 1-Jun-2015 12:05 PM IST Chandru கருத்துக்கள்

ராதிகா சரத்குமார் நடித்து தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகும் கல்லூரி விளம்பரம் ஒன்று தொடர்பாக பெரும் சர்ச்சை கிளம்பியது. விளம்பரத்தில் அவர்கள் காட்டும் இடவசதியும், கல்வித்தரமும் நிஜத்தில் இல்லை எனும் குற்றச்சாட்டு வேகவேகமாக பரவியது. அதனைத் தொடர்ந்து மேற்கண்ட விளம்பரங்களில் நடிகைகள் சினேகா, ராதிகா சரத்குமார் உட்பட சில திரை நட்சத்திரங்கள் பங்கு வகித்திருப்பதும் சர்ச்சையானது.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராதிகா சரத்குமார் ட்வீட் மூலம் விளக்கமளித்துள்ளார். அதில், ‘‘அந்த விளம்பரத்தில் நான் நடித்ததோடு சரி. எனக்கும் அந்த நிறுவனத்திற்கும் எந்தவித நேரடித் தொடர்போ, வியாபாரத் தொடர்போ இல்லை. அந்த நிறுவனத்திற்கு நான் பிரான்ட் அம்ராசிடராகவும் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை. எதையும் நன்கு விசாரித்துவிட்டு அதன்பிறகு பெற்றோர்களும், மாணவர்களும் முடிவு செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;