‘தல 56’ படத்தில் ‘மங்காத்தா’ நடிகர்!

‘தல 56’ படத்தில் ‘மங்காத்தா’ நடிகர்!

செய்திகள் 1-Jun-2015 11:37 AM IST Chandru கருத்துக்கள்

தற்போது ‘வீரம்’ சிவாவின் இயக்கத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ‘தல’ அஜித். இது அவரின் 56வது படம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லக்ஷ்மிமேனனும் நடிக்கிறார்கள். தற்போது சென்னையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் ‘தல 56’ டீம் படப்பிடிப்பிற்காக கொல்கத்தா செல்கிறது. இப்படத்தில் லேட்டஸ்ட்டாக நடிகர் அஸ்வினும் இணைந்திருக்கிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து சூப்பர்ஹிட்டான ‘மங்காத்தா’ படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் அஸ்வின். அதோடு மேகா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். ‘தல 56’ படத்தில் இணைந்தது குறித்து தனது ட்வீட்டில், ‘‘நான் நடித்த மிகச்சிறந்த படங்களில் ‘மங்காத்தா’வும் ஒன்று. அஜித் சார், சிவா சாருடன் ‘தல 56’ல் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறேன்!’’ எனக் குறிப்பிட்டுள்ளார் அஸ்வின். விரைவில் நடைபெறவிருக்கும் கொல்கத்தா ஷெட்யூலில் அஸ்வினும் இருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;