மகேஷ் பாபு நடிக்கும் தமிழ் படம்!

மகேஷ் பாபு நடிக்கும் தமிழ் படம்!

செய்திகள் 1-Jun-2015 11:27 AM IST Chandru கருத்துக்கள்

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்க, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் ‘பிரம்மோற்சவம்’. ‘பிவிபி சினிமா’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீகாந்த் அதலா இயக்குகிறார். இப்படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், ப்ரணிதா இருவர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

குடும்ப உறவுகளின் மகிமையையும், உன்னதங்களையும் சொல்வதொடு குடும்ப உறவுகள் எப்படி கொண்டாட வேண்டும், தலைமுறைகளை தாண்டி நாம் பாரம்பரியத்தை எப்படி போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதை இசை கலந்து சொல்லும் படமாம் ‘பிரம்மோற்சவம்’.
இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். மிக்கி மேயர் இசை அமைக்கிறார். ‘பிவிபி சினிமா’ நிறுவனம் தற்போது கார்த்தி, நாகார்ஜுனா முதலானோர் நடிக்கும் பெயரிடப்படாத படம், ஆர்யா நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’, மலையாள ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ் ரீ-மேக் என பல படங்களை தயாரித்து வருவதோடு, ‘பிரம்மோற்சவம்’ படத்தையும் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;