மாதவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

மாதவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 1-Jun-2015 11:06 AM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் அறிமுகம் செய்த நடிகர்களில் மாவதவனுக்கு தனி ஒரு இடம் உண்டு! தனது முதல் படமான ‘அலைபாயுதே’ படத்தின் மூலமே இளம் உள்ளங்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்ட மாதவன், இன்றும் இளம் தலைமுறை ரசிகர்களின் ஃபேவரிட் ஸ்டார் தான். இவர் தமிழில் கடைசியாக நடித்து வெளிவந்த படம் ‘வேட்டை’. இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில ஹிந்திப் படங்களில் பிசியாகி விட்ட மாதவன் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான ஹிந்தி படம் ‘தனு வெட்ஸ் மனு ரிட்டேன்ஸ்’. இந்த படத்தின் வெற்றியுடன் வேறு ஒரு சில ஹிந்தி படங்களிலும், ‘இறுதிச் சுற்று’ என்ற தமிழ் படத்திலும் நடித்து வரும் மாதவனுக்கு இன்று பிறந்த நாள். இன்று பிறந்த நாள் காணும் மாதவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;