‘54321’ படத் தலைப்பின் விளக்கம்!

‘54321’ படத் தலைப்பின் விளக்கம்!

செய்திகள் 1-Jun-2015 10:51 AM IST Top 10 கருத்துக்கள்

கார்த்திக் சுப்பராஜிடம் உதவியாளராக இருந்த ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ள படம் '54321: இப்படத்தை ‘பானு பிக்சர்ஸ்’ ராஜா, மற்றும் ‘மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ்’ ஜி.வி.கண்ணன் இணைந்து தயாரித்துள்ளனர். இரண்டு மணிநேரத்தில் நடக்கும் கதையே இரண்டு மணி நேரப் படமாகியுள்ளது. 5 மனிதர்கள், 4 லைஃப் ஸ்டைல், 3 கொலை, 2 மணி நேரம், 1 ரிவெஞ்ச் என்பதே ‘54321’ படத் தலைப்பின் விளக்கமும், கதை சுருக்கமும்!

இப்படத்தில் ஜி.ஆர்.அர்வின், ஷஃபீர், பவித்ரா, ரோகிணி, ரவிராகவேந்திரா, ஜெயகுமார் ஆகியோர் நடித்துள்ளார்கள். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக அமைந்துள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. டிரெய்லரை திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.
விழாவில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும் போது, ‘‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கு வந்தேன் .'54321' படத்தின் டிரெய்லரையும், பாடலையும் பார்த்து வியந்தேன். கார்த்திக் சுப்பராஜ் படமோ என்று நினைத்தேன். அவ்வளவு அற்புதமாக இருந்தது. முதிர்ச்சியுடன் இருந்தது. படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது இதுதான் எனக்குத் தோன்றியது. இதில் நடித்த நடிகர்கள் பெரிய அளவுக்கு வளர வேண்டும்’’ இவ்வாறு டி.சிவா பேசினார்.

இவரை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகை ஜெய்சித்ரா, கே.ராஜன் மற்றும் பலர் படக்குழுவினரை வாழ்த்திப் பேசினர்.

இப்படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைத்திருக்கிறார். பானு முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;